அத்தி வரதர்

அத்தி வரதப் பெருமாளே, உம்மை அருள் கூர்ந்து 2019 வைபவம் முடிந்தவுடன் மீண்டும் குளத்துக்கே சென்று சயனிக்க வேண்டுகிறேன்.

பாரதத்தில், வரலாற்றுப் புத்தகங்களில் யார் இடம் பெறவேண்டும், அவ்வாறு இடம் பெறுவோரை எப்படி சித்தரிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் இடத்தில் இந்து விரோதிகளே இருக்கின்றனர். அவர்கள் பாரதத்தை மேன்மையடையச் செய்த இந்து அரசர்களையும், அரச வம்சங்களையும் பற்றி தேவையான அளவு கூறாமல் இருட்டடிப்பு செய்தும், பாரதத்திற்கு சிறுமையை ஏற்படுத்திய கோரி, கஜினி, கில்ஜீ, துக்ளக், முகலாயர்கள், மாலிக் கஃபூர், ஹைதரலி, திப்பு சுல்தான் ஆகியோரை புகழ்ந்தும், தன் ஆதிக்கத்தை காண்பித்து வருகின்றனர்.

இந்த நிலை நீடித்தால், பாரதத்தின் பொக்கிஷங்களான கோவில்களை சூரையாடிய அந்நிய படையெடுப்பாளர்களை இந்துப் பிள்ளைகள் பெரிய வீர புருஷர்களாகப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

அத்தகைய மூர்க்க சக்திகளிடமிருந்து இந்துக்களின் தங்கள் உயிரையும் வாழ்க்கையையும் துச்சமாகக் கருதி மூர்த்திகளைக் காக்கும் பொருட்டு அவர்களை நீருக்கடியிலும் நிலங்களுக்கடியிலும் இரகசியமாக வைத்து காப்பாற்றிய வரலாறு அடுத்த தலைமுறை குழந்தைகள் மறவாமல் இருக்க, அத்தி வரதரே நீர் நீருக்குள் மீண்டும் அருள் கூர்ந்து செல்வீராக.

அடுத்த தலைமுறைக்கு அந்நிய படையெடுப்பாளர்களிடமிருந்து தருமத்தைக் காக்க இந்துக்களும் இந்துக் கடவுளர்களான நீங்களும் பட்ட பாட்டை எடுத்துக் கூற வாய்ப்பளிப்பீராக.

இந்த இந்துக் கோயில்கள் உடைப்பு வரலாறும், விக்ரஹங்களை இந்துக்கள் உயிரைக் கொடுத்துக் காப்பாற்றிய வரலாறும் என்றும் மறக்கப்படக் கூடாதவை. நாம் அனைவரும் விழிப்பு நிலையிலே தான் என்றும் இருக்க வேண்டும். எல்லோரும் நம் நண்பர்கள் தான் என்ற நித்திரைக்குச் அடுத்து வரும் தலைமுறைகள் சென்றுவிடக் கூடாது.

அத்தி வரதரே, எம்மை விழிப்புள்ள மனிதர்களாக இருக்க வைக்கவும்.

ஓம் நமோ நாராயணாய!!!

Comments