ஜோதிகா - ஒரு பனிப்பாறையின் உச்சி முனையே



பிரகதீசுவரர் டெம்பிள் அது ரொம்ப famous ஆ இருக்கு. அதை பார்க்காம போகாதீங்க, அதை கண்டிப்பா பார்க்கனும்னு சொன்னாங்க, அவ்ளோ அழகா இருக்கு, நான் ஏற்கனவே போயிருக்கேன் almost like உதயப்பூர் பேலஸ் மாதிரி பண்ணிருக்காங்க.

பட் அதுக்கு அடுத்த நாள் என்னோட ஷுட்டிங் ஒரு ஹாஸ்பிடலில் இருந்துச்சு. very badly maintained. And நான் பார்த்தத எல்லாம் என் வாயால, I don't think.., சொல்லமுடியாது.

இப்போ ஒரு request to....,
நான் ராட்சசி படத்துல சொல்லிருக்கேன். கௌதம் சொல்லிருக்காங்க.
That, கோவிலுக்கு அவ்ளோ காசு குடுக்குறீங்க, அவ்ளோ செலவு பண்ணுறீங்க, பெயிண்ட் அடிக்கிறீங்க, மெயிண்ட்டெய்ன் பண்ணுறீங்க, கோவில் உண்டியலில் அவ்வளவு காசு போடுறீங்க,
ப்ளீஸ் அதே அளவு காசு பில்டிங்ல போடுங்க, ஸ்கூல்க்கு குடுங்க, ஹாஸ்பிடலுக்கு குடுங்க.
School is as important & ரொம்ப ஒரு மாதிரி ஆகிடுச்சு எனக்கு. Actually நான் அந்த கோவிலுக்கு போகல, அந்த ஹாஸ்பிடல் பார்த்துட்டு அந்த கோவிலுக்கு போகல.
Hospitals are as important
Schools are as important
So, let's donate to them also.
அதே அளவிற்கு மருத்துவமனையும், பள்ளிக்கூடங்களும் முக்கியத்துவம் வாய்ந்தது தான். அதற்கும் நன்கொடை அளிப்போம்.
- ஜோதிகா, நடிகர்

---
நீங்கள் 'as important' என்று சொல்வதிலிருந்து நீங்கள் குறை கூறவில்லை என்ற பிம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். நன்றி. ஆனால் அந்த பிம்பத்திற்குள் ஒளிந்துகொண்டு நீங்கள் குள்ளநரித்தனமாக செய்ய விரும்பும் செயல்கள் எங்களுக்குத் தெரியாமல் இல்லை. 
உங்கள் ராட்சசி படத்தில் 'இது என்ன கோவில் கருவறையா?' என்றீர்கள். தங்கள் மாமனார், "கடவுள் சிலையை வடித்த சிற்பி, கடவுளை கருவறைக்குள் பிரதிஷ்டை செய்த பின் கருவறைக்குள் நுழைய முடியுமா?" என்று கேட்டு இன்றைய சமூகத்தில் இல்லாத தீண்டாமையைப் பற்றி பேசுகிறார். உங்கள் வீட்டின் இந்து எதிர்ப்பு மனநிலை தெரிகிறது. உண்மை என்னவென்றால், அந்தந்த சமூகத்தின் கோவில்களில் அந்தந்த சமூகத்தினர் தான் அர்ச்சனை செய்கின்றனர். அவர்கள் மட்டுமே கருவறைக்குள் நுழைய முடியும். பிராமணர்களிலேயே, ஐயரோ, ஐய்யங்காரோ, கருவறைக்குள் நுழையமுடியாது, குருக்களான சிவாச்சாரியார்களும், பட்டாச்சாரியார்களும் தான் நுழைய முடியும். இதைப் போன்ற கட்டுப்பாடுகளை எல்லா மதங்களும் விதிக்கின்றன. இதில் இந்துமதத்தை மட்டும் குறைசொல்ல ஒன்றுமில்லை.
நீங்கள் மட்டுமல்ல மொத்த சினிமாத் துறையும் அவ்வாறுதான் இருக்கிறது. விஜய் சேதுபதி 10-50 வயதுப் பெண்கள் சபரி மாலைக்குள் நுழையலாம் என்கிறார். அப்படி நுழைவிடாமல் தடுக்கப்படுவது அநீதி என்கிறார். சபரிமலையைப் பற்றியோ அதன் வரலாறு பற்றியோ படித்து தெரிந்துவைத்திருக்கிறீர்களா அதைப் பற்றி கருத்து கூற? உங்களுக்கு locuc standi என்ன இருக்கிறது? ஏதாவது செய்து இங்குள்ள இந்து மத வெறுப்புக்கு கூட்டத்தின் ஆதரவைப் பெற வேண்டும், உங்கள் போலி "secular" முற்போக்குத் தனத்தை வெளிப்படுத்த வேண்டும். அதுதானே உங்கள் நோக்கம்?
திரைத் துறையினரான நீங்கள், மிகவும் முற்போக்கானவர்கள் என்றே வைத்துக்கொள்வோம். பிற்போக்கான அம்சங்கள் இந்துமதத்தில் மட்டும் தான் உள்ளனவா? இசுலாமிலோ கிறித்துவதிலோ பிற்போக்கான அம்சங்களே இல்லையா? நான் இந்து. என் மதத்தில் உள்ள குறைகளை முதலில் களைகிறேன் என்றெல்லாம் கப்ஸா விடத்தேவையில்லை. திரைத்துறையில் வேரூன்றியிருக்கும் இந்து மத வெறுப்பு அனைவரும் அறிந்ததே. உங்களுக்குத் தேவைப்படும் பணபலம் கடவுள் மறுப்பாளர்களிடம் இருக்கிறது. அவர்களை குளிர்வித்தால் தான் உங்களுக்குப் பிழைப்பு ஓடும். உங்கள் அவல நிலை புரிகிறது. அவர்களை திருப்தி செய்து செய்து உங்களுக்கும் அவர்களின் மனநிலையே வந்துவிட்டது. Survival of the fittest எல்லாவற்றுக்கும் பொருந்துமல்லவா.
 
உங்கள் செயல்கள் மேம்போக்காக பார்ப்பவர்களுக்கு, "இதில் என்ன இருக்கிறது" என்றே தோன்றும். இதைத் தனியாகப் பார்ப்பது எவ்வளவு அர்த்தமற்றது என்பதை பலரும் அறிந்தேயிருக்கிறார்கள். இது பல தசாப்தங்களாகத்  திரைத்துறையில் தொடரும் மதவெறுப்பு பிரச்சாரத்தின் விளைவின் வெளிப்பாடு என்று எல்லோருக்கும் தெரிந்தே இருக்கிறது.
அந்த மத வெறுப்பு பிரச்சார வரலாற்றை எடுத்துக் கூறுகிறது இந்த காணொளி.

பாரதியார், மோடி எல்லாரும் கோவிலுக்கு பதில் பள்ளிகள் காட்டலாமே, கழிப்பறைகள் காட்டலாமே என்று கூறுகின்றனரே என்று சிலர் கூறுகின்றனர்.
பாரதியார் இவ்வாறு தானே சொல்லுகிறார்?
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம்,
 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கோவில்கள் தானே பள்ளிகளாக இருந்தன. கோவில்களை சுற்றி தானே கலைகள் வளர்ந்தன. இன்றும் கூட நாட்டிய நிகழ்ச்சிகளும் இசை நிகழ்ச்சிகளும் கோவில்களில் நடைபெறுகின்றனவே. 20-30 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட வேத வகுப்புக்கள் கோவில்களில் நடைபெற்றனவே. கோவில்களில் இசை கற்றுக்கொடுக்கப்பட்டதே.

Madurai, Tamil Nadu / India: Indian Family Walks Through An Arch ...
கோவில்களில் எத்தனை கடைகள்? அதில் எத்தனை எத்தனை கடைகள் இஸ்லாமியர்களால் நடத்தப்படுகின்றன? கோவில்களைப் போன்ற மதசார்பற்ற மத ஸ்தலங்களை உங்களால் காண்பிக்க முடியுமா? தங்களுக்கு நான் சொல்லிப் புரிய வைக்கவேண்டியது ஒன்றும் இல்லை. கோவில் என்பது ஒரு வணிக மையமும்தான். ஒரு கோவில், அதை சுற்றியிருக்கும் 1-5 கிமீ சுற்றளவில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்கிறது. வறுமைக்கு மருந்தாக இருக்கிறது. பூ, ஊதுபத்தி, மாலை, துணிகள், அணிகலன்கள், வளையல், தோடு, பொம்மைகள், ஆகிய பொருட்களை விற்பவர்கள், உணவகங்கள் வைத்திருப்பவர்கள், தங்குமிடங்கள் வைத்திருப்பவர்கள், வாகன ஓட்டுனர்கள் ஆகியோர் செழிக்கின்றனர். கோவில்களுக்கு வரும் பக்தர்கள் இந்தப் பொருட்களையும், சேவைகளையும் பயன்படுத்துவதன் மூலம் பல உயிர்களை வாழவைத்து வருகிறார்கள். நாங்கள் உண்டியலில் போடும் பணம் அரசுக்குத் தானே  செல்கிறது. அந்த தொகையை வைத்து பல மருத்துவ மனைகளை கட்டலாமே. தவறியது அரசு தானே. தமிழக அரசை தட்டிக் கேட்பாரா ஜோதிகா? தட்டிக்கேட்க வேண்டாம். இப்பொழுது கூறியதைப்போல ஒரு யோசனையாகவாவது கூறுவாரா ஜோதிகா? அல்லது என் படம் ரிலீஸ் ஆனால் போதும் எதற்கு அரசாங்கத்தை பகைத்துக் கொள்ளவேண்டும் என்று வாய்திறவாமல் இருந்துவிடுவாரா?

ஜோதிகா மேடம், நாகூர் தஞ்சையிலிருந்து 80 கிமீ தான், வேளாங்கண்ணி 90 கிமீ தான். அந்த வழிபாட்டு இடங்களும் உதைப்பூர் பேலஸ் போன்றே பிரம்மாண்டமாக இருக்கின்றன, தஞ்சை பெரியகோவில் போல் இந்து அறநிலையத்துறையின் கீழ் இல்லாமல், இஸ்லாமியர்களாலும், கிறித்தவர்களாலும், மனநிறைவோடு நன்றாகக் பராமரிக்கப்படுகின்றன. அங்கும் நீங்கள் செல்லலாம். அங்கு நீங்கள் செல்லும்பொழுது அரசு மருத்துவமனைகளின் அவல நிலை உங்கள் மனக்கண் முன் வராமல் இருக்குமாக.

Comments